கோவை மாவட்டம் சிறுமுகை வார சந்தையில் கொட்டும் மழையில் நனைந்தபடி பொருட்களை பாதுகாக்கும் பெண் வியாபாரியின் வீடியோ வெளியாகியுள்ளது.
சிறுமுகை பேரூராட்சி அலுவலகம் முன் செயல்பட்டு வரும் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் விற்பனையாளர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பொருட்கள் நனையாமல் இருக்க மழையில் நனைந்தபடியே பொருட்களை பாதுகாத்து நின்ற பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.