தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தொடர்ந்து ஐந்தாவது நாளாக குளிப்பதற்கு தடை தொடர்கிறது. நீர்வரத்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.