நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே செல்போனில் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவிந்தபேரியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் பேருந்து நிறுத்தம் அருகே செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் 9 மாணவர்களை கைது செய்தனர்.