ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி திருச்சியில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தின்போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் மூலவர் தங்க கவசம் அணிந்தும், உற்சவர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.