சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பிரபல துணிக்கடையில் குடிநீர் தொட்டியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரபல துணிக்கடையின் 3வது தளத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்துக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடித்துள்ளார்.
அப்போது குடிநீர் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த அவர் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது அதில் கரப்பான்பூச்சி மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக கேள்வி கேட்ட போது கடை நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.