இலங்கை வவுனியா கோயிலில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயிலில் மாம்பழ திருவிழாவையொட்டி விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஏலத்தில் விடப்பட்டது.
அப்போது பலத்த போட்டிக்கு மத்தியில் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது. உக்குளாங்குளத்தை சேர்ந்த சிந்துஜா என்பவர் மாம்பழத்தை ஏலத்தில் எடுத்தார்.