புதுடெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் அன்று இந்திய குடியரசு தலைவர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.