பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கங்களை வென்ற மனுபாக்கருக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை அவர் சந்தித்தார். அப்போது 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி மத்திய அமைச்சர் பாராட்டினார்.