மத்தியபிரதேசத்தில் வெள்ளத்தில் ஆற்றின் நடுவே சிக்கி தவித்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சிவபுரி பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில், ஆற்றின் நடுவே 8 பேர் சிக்கி கொண்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர், எட்டு பேரையும் பத்திரமாக மீட்டனர்.