புதுச்சேரியின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாளையொட்டி கீழுர் நினைவிடத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து தியாகிகளை கெளரவித்தார்.
கடந்த 1962 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 -ஆம் தேதி பிரெஞ்சு அரசும், நேரு தலையிலான இந்திய அரசும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தன.