ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார்.
அதன்படி 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானாவில், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கி, 12-ம் தேதி முடிவடைகிறது.
தொடர்ந்து வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 13-ம் தேதியும், வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதியும், நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.