மேற்கு வங்கத்தில் மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கனிமொழி இதுவரை ஒரு கருத்து கூட பதிவிடாதது ஏன்? - குஷ்பு கேள்வி?
Mar 21, 2026, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 மேற்கு வங்கத்தில் மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கனிமொழி இதுவரை ஒரு கருத்து கூட பதிவிடாதது ஏன்? – குஷ்பு கேள்வி?

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்டுள்ள விகாரத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் மற்றும் பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன்,

இந்த சம்பவம் நாட்டையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது வரை மம்தா பானர்ஜி இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாடு முதல்வர், மேற்கு வங்க முதல்வரை இந்த விவகாரம் தொடர்பாக கண்டிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் மூத்த உறுப்பினராக உள்ளார் எனவே இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு, நிச்சயம் பேச வேண்டும், இதுவே ஜனநாயக கடமையாகும் என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ சுந்தர்,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த பாலியல் படுகொலை சம்பவத்தை வைத்து பார்க்கும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் இதுபோன்ற பிரச்னைகள் வருகிறது என தோன்றுகிறது. மம்தா பானர்ஜி இந்தியாவிலேயே ஒரே பெண் முதல்வராக இருக்கிறார், மகளிர்க்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர் செய்து கொடுப்பார், மகளிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் பிரச்னைகள் மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கிறார்.

ஒரு தாய் ஸ்தானதில் இருந்து கொண்டு தனது குழந்தைகளை பாதுகாப்பதில் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை, இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஒரு பெண் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு கற்பழிக்கப்பட்டு கொலை செய்ய பட்டு இருக்கிறார், நிர்பயாவுக்கு பிறகு இதுபோன்ற ஒரு விஷயத்தை பார்க்கும் போது, மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜிக்கு எப்படி தூக்கம் வருகிறது என எனக்கு தெரியவில்லை.

அந்த பெண் இறந்ததன் பிறகு அந்த கல்லூரியின் சூப்பிரண்டு பெண்ணின் பெற்றருக்கு அழைத்து உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார், அதன் பிறகு இரண்டாவது முறையாக அழைத்து உங்கள் பெண் தற்கொலை செய்துவிட்டார் என சொல்லி இருக்கிறார். மேலும் பெற்றோரிடம் மருத்துவனையில் 3 மணி நேரம் கழித்தே அந்த பெண்ணின் உடலை கொடுத்துள்ளனர்.

பயங்கரமான கொடுமை செய்து, உடலை வருத்தி, கடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். நாய் கடித்தால் கூட அவரது உடலில் உள்ள காயம் போல இருக்காது.

அந்த பெண்ணின் உடலில் 150 கிராம் விந்து இருந்ததாக உடர்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கிறது. இது ஒருவரால் அரங்கேறி இருப்பது கிடையாது, இது கூட்டுப்பாலியல் வன்கொடுமையாக தான் இருக்கும்.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் பிரச்னை வைத்து பார்க்கும் போது, மம்தா பானர்ஜி முதல்வராக தொடர வேண்டுமா? அதற்கான தகுதி இருக்கிறதா என்று தான் நான் கேட்பேன். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

நேற்று 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் போது, நேற்றைய முன்தினம் மேற்கு வங்கத்தில் 5000 பேர் ஒருங்கிணைந்து உள்ளனர். அங்குள்ள 18 அறைகளை உடைத்து, இருக்கின்ற அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் உடைத்து மோசம் செய்துவிட்டனர். ஆனால் காவல்துறை இதனை தடுக்கவில்லை… மம்தா பானர்ஜி தங்களுக்கு பிரச்னை வந்துவிடும் என இவ்வளவு பேரை ஏவி விட்டுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி ஒரு டுவீட் கூட போடவில்லை, முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உறங்க நேரம் இருக்கிறது என பேசாமல் இருக்கிறாரா? சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்த பிறகு தான் கவரப் பண்ணுகிறார்கள்.

தைரியம் இருந்தால் மம்தா ஆட்சியில் தவறு நடக்கிறது என ராகுல் காந்தி கேள்வி கேட்க ஏன் அஞ்சுகிறார்? பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்? திரிணாமுல் காங்கிரஸ் -க்கு எதிராக போய் தெருவில் உட்கார வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதே போல உத்தரகாண்டில் இன்று வெளியான செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த செய்திப் படி அந்த மாநில முதல்வரும் பதவி விலக வேண்டும்.

தமிழ்நாட்டில் எவ்வளவு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது? இங்கே முதல்வர் ராஜினாமா செய்துவிட்டாரா? எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும், அவர்களே சட்டம் சீர்குலைவுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: Why hasn't Kanimozhi posted a single comment on the issue of student brutality in West Bengal? - Khushbu question?
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி- முகமது யூனுஸ் பேச்சு!

Next Post

ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டமாக பேரவைத் தேர்தல்!

Related News

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies