பணி விசாவுக்கான காத்திருப்பு காலத்தை 9 மாதங்களில் இருந்து 2 வாரங்களாக ஜெர்மனி அரசு குறைத்துள்ளது.
ஜெர்மனியில் சுமார் 6 லட்சம் வேலைகள் காலியாக உள்ள நிலையில், நீண்ட கால விசா நடைமுறைகள் காரணமாக இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது சிரமமாக உள்ளதால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் முதலீடு செய்த இந்திய நிறுவனங்கள், இதன் மூலம் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.