கென்யாவின் Eldoret நகரில் வைக்கப்பட்ட தடகள வீரர்களின் சிலைகள் குறித்து மிகுந்த விமர்சனங்கள் எழுந்த நிலையில் அச்சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.
Eldoret-டுக்கு நகர அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து, அதிபர் வில்லியம் ரூட்டோ அந்நகரை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு, நகரம் முழுவதும் பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டன. இதில், கென்ய கொடியை கையில் ஏந்தி ஓடுவது போன்ற தடகள வீரர்களின் சிலைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், அச்சிலைகள் விளையாட்டு வீரர்களை அவமதிப்பது போல் விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த சிலைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன.