பிரதமர் மோடியை சந்தித்தது தங்களது வாழ்வின் சிறந்த தினம் என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பரான ஸ்ரீஜேஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்தன்று ஸ்ரீஜேஷும், அவரது குடும்பத்தினரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீஜேஷ், இந்த நாள் தங்களது குடும்பத்தினருக்கு சிறந்த தினம் என்று கூறியுள்ளார்.