150 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் தொடர்பாக, நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜாவிடம் விசாரணை நடத்த ஆந்திர சிஐடி பாேலீஸ் விஜயவாடா காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோன் ரெட்டி ஆட்சிக் காலத்தில், கடைசி 2 வருடங்களில் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பதவி வகித்தார்.
அப்போது, “ஆடுதாம் ஆந்திரா” என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ரோஜா தலைமையில் நடைபெற்றன.
இதற்காக, ஆந்திரா அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் விளையாட்டு போட்டிக்கான டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், தற்போது போலீஸ் விசாரணை சூடுபிடித்துள்ளது. மேலும் ரோஜாவிடம் விசாரணை நடத்த ஆந்திர சிஐடி பாேலீஸ் விஜயவாடா காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது.