சூடானில் காலரா பாதிப்பால் 300 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சூடானில் வறட்சி மற்றும் உள்நாட்டுப் போர் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பட்டைந்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரமின்மை காரணத்தால் அங்கு காலரா நோய் தொற்று பரவி வருகிறது. இந்த காலரா தொற்றால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் குழந்தைகள் உட்பட பலர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.