பாகிஸ்தானில் குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குரங்கம்மை நோய் பாதிப்பை அவசர நிலையாக உலக சுகாதர அமைப்பு அறிவித்த நிலையில் அனைத்து நாடுகளும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு திரும்பியவர்களில் சிலருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 பேருக்கு நோய் பாதிப்பு உள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்த இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்திற்கு ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.