விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, திருமாவளவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.