மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Aug 17, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Aug 17, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் அரங்கேறும் அத்துமீறல்கள் மன்னிக்க முடியாதவை என மருத்துவர்களின் முழு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி சிலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு இரு நாட்களுக்கு முன் நிகழ்ந்த வன்முறைகளும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான இந்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.

முதுநிலை பயிற்சி மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கும் நிலையில், கடந்த புதன்கிழமை இரவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களை சூறையாடியதுடன், மருத்துவர்களையும், காவல்துறையினரையும் தாக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலைக் கலைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

உயிர்காக்கும் மருத்துவர்கள் கடவுள்களைப் போன்றவர்கள். அவர்களை வணங்க வேண்டிய கைகளால் பாலியல் வன்கொடுமை, படுகொலை, கொலைவெறித் தாக்குதல்களை நடத்துபவர்கள் கண்டிப்பாக மனிதகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யார்? வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை இதுவரை மேற்குவங்க காவல்துறையும், மத்தியப் புலனாய்வுத்துறையும் கண்டுபிடிக்காதது மருத்துவர்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

மருத்துவர்களின் பணி என்பது உன்னதமானது என்பதைக் கடந்து மிகவும் கொடுமையானது. முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணி நேரம் பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும். இதுவே கடுமையான மன உளைச்சலையும், உடல் சோர்வையும் அளிக்கக் கூடிய செயலாகும். அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்ய முடியாது. பரந்து விரிந்த அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைகளில் பல இடங்களுக்கு அவர்கள் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் முதுநிலை மருத்துவம் பயிலக் கூடிய இன்றைய சூழலில் இரவு நேரப் பணிகள் என்பவை பாதுகாப்பற்றவையாகவே உள்ளன.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூரங்கள் குறித்து சில நாட்களுக்கு பேசி விட்டு, வேறு பெரிய சிக்கல் வெடித்ததும் இதை மறந்து விடக் கூடாது. கொல்கத்தா பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மருத்துவர்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; வாய்ப்பிருந்தால் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கான பணி நேரத்தை இயன்ற அளவுக்கு குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

Tags: anbumani ramadossdoctors strikekolkatta lady doctor murder issuepmk
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை உத்தரவு!

Next Post

சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதம் : உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Related News

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies