தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக கூடுதலாக 27 ஆயிரத்து 628 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அதன் படி காவிரியில் 8 ஆயிரத்து 509 அடி நீரும், வெண்ணாற்றில் 8 ஆயிரத்து 506 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 8 ஆயிரத்து 100 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மொத்தம் 27 ஆயிரத்து 628 கன அடி நீர் பாசன வசதி பெறும் வகையில் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.