மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி, நாளை தாம் சென்னை வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை திறந்துவைக்கவுள்ளதாகவும் அந்தப் பதிவில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவரது வருகையையொட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.