கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
செப்டம்பர் 7 -ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் கூழ், சிறு சிறு குச்சிகள் மற்றும் தேங்காய் நார்கள் ஆகியவற்றை கொண்டு ஒரு அடி முதல் 10 அடி வரையிலான சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.
ராமர் விநாயகர், அன்னபட்சி விநாயகர், சிம்ம விநாயகர், ரிஷப விநாயகர் மற்றும் சூரசம்ஹார விநாயகர் என பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை உருவாக்கி அழகிய வண்ணம் தீட்டி வருகின்றனர்.