முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட, தமிழக அரசு மத்திய அரசியிடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிடுகிறார்.
மேலும், கடலோர காவல் படைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைக்கிறார்.