பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என நிர்பயாவின் தாய் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2012ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் மருத்துவர்களுக்கே பாதுகாப்பாக இல்லை என்றால் சாதாரண பெண்களின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும் எனக்கூறிய அவர், மருத்துவமனையில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் ஆஷாதேவி கூறியுள்ளார்.