கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடுவது மகிழச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பலமுறை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டவர் கருணாநிதி என்றும், அரசியல், இலக்கியம், சமூகப் பணிகளில் கருணாநிதி ஆற்றிய பங்கு அளப்பரியது என கூறியுள்ளார்.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் நாட்டம் கொண்டிருந்தவர் கருணாநிதி எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளளார். மேலும் பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.