நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
காரம்பாடு கிராமத்தில் அமைந்துள்ள சுடலைமாடசாமி கோவிலில் கொடை விழா நடைபெற்றது. அப்போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இளைஞர், மற்றொரு குடும்பத்தை சேர்ந்த அண்ணன் – தம்பியை வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.