சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை ஜெயின் கோவிலின் பூட்டை உடைத்து 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ருத்ரபன்ர தெருவில் அமைந்துள்ள ஜெயின் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25 கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.