தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடல்நீர் உள்வாங்கியது. புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வார இறுதியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் கடல் நீர் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. வைகுண்டர் சுவாமிக் கோயில் வரை கடல் நீர் உள்வாங்கியதால் பாறைகள் ஆங்காங்கே தெரிவதை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.