மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கரூரில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 7 கிலோமீட்டர், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு 3 கிலோமீட்டர் என பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பந்தய தூரத்தை விரைவாக கடந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.