காங்கிரஸிலிருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆஸாத் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கிய குலாம் நபி ஆஸாத், தனது கட்சியை மீண்டும் காங்கிரஸில் இணைக்க போவதாக தகவல் வெளியானது.
இதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் தலைவர்களை தாம் இதுவரை தொடர்புகொள்ளவில்லை என்றும், குழப்பம் விளைவிக்கும் நோக்கில், இதுபோன்ற வதந்தியை ஒரு சிலர் பரப்புவதாகவும் தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீரில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வதந்திக்கு குலாம் நபி ஆஸாத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.