சென்னையில் தற்காலிமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ சேவை தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.