கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
ஏற்கெனவே, அந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வரிடம் 2 நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், மீண்டும் ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு வந்து சிபிஐ தடயங்களை சேகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.