குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில், சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் விடுமுறை தினத்தை கொண்டாட அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.