மேற்கு வங்கத்தில் 42 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த உத்தரவை அம்மாநில சுகாதாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் 42 மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்து கடந்த 16-ம் தேதி அம்மாநில சுகாதாரத் துறை உத்தவிட்டது.
இதில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த இரு மருத்துவர்களும் இடம் பெற்றிருந்ததால், கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.