கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை மேற்கோள்காட்டி, சட்டம்- ஒழுங்கு விவகாரம் தொடர்பாக இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநில காவல் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க அனைத்து மாநில காவல் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.