கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள கடலோர காவல்படை அலுவலகத்தில், அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.