ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ஆவணி மாத பவுர்ணமி தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இரவு தங்கி சிறப்பு வழிபாடு செய்வதற்காக, ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.