மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை ஏற்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு,100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.