தமிழக அரசின் 50-வது தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் 50-வது தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான முருகானந்தம், கடந்த 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார்.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இவர், ஊரக வளா்ச்சித் துறை இணைச் செயலா், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின், இவர் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்ட முருகானந்தம் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.