அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்திய தின அணிவகுப்பில், அயோத்தி ராமர் கோயில் வடிவ ஊர்தி இடம்பெற்றது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் `இந்தியா தின அணிவகுப்பு’ ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு பிறகு ஏற்பாடு செய்யப்படும் இந்த அணிவகுப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான அணிவகுப்பில், பாஜக எம்பி மனோஜ் திவாரி, நடிகை சோனாக்ஷி சின்ஹா, நடிகர் பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த அணி வகுப்பில் அயோத்தி ராமர் கோயில் வடிவ ஊர்தியும் இடம் பெற்றது. 18 அடி நீளத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஊர்தி காண்போரை வெகுவாக கவர்ந்தது. இந்த அணிவகுப்பில் 40-க்கும் மேற்பட்ட ஊர்திகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட இசைக் குழுக்கள் பங்கேற்றன.