ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
“சகோதர சகோதரிகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பின் அடையாளமாக திகழும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு, நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
இந்த புனித பண்டிகை, உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.