பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து விலகிய இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகன் மார்க்கெல்லும், கொலம்பியாவில் நடைபெற்ற பெண்கள் முன்னேற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்றனர்.
கொலம்பிய துணை அதிபர் Francia Márquez-ன் அழைப்பை ஏற்று இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகன் மார்க்கெல்லும், கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற உரையாடல் நிகழ்வில் பங்கேற்ற அவர்கள், ஆப்பிரிக்க பெண்கள் அரசியலில் சந்திக்கும் சவால்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்துகள் குறித்தும் விவாதித்தனர்.