சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான பிரிவில் பெலாரஸ் வீராங்கனை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் மாசன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பெலாரஸ் நாட்டின் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்காவுடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் போலந்து வீராங்கனையை தோற்கடித்தார். இதன் மூலம் அரினா சபலென்கா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.