கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதே போல 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி மாணவிகளுக்கு என்.சி.சி. முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவி ஒருவரை பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அதனை பெற்றுக்கொண்ட போலீசார் பள்ளி முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் கோவையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போது சிவராமன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பமுயன்றபோது வலது காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் என்.சி.சி என்ற பெயரில் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.