ரக்ஷா பந்தனை ஒட்டி மறைந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரக்ஷா பந்தனை ஒட்டி, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது அன்பான சகோதனுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் என்றும், கடவுளின் முன்னிலையில் நீ மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பாய் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.