புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட கடலோர காவல்படை விமான தளத்தின் வளாகத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
லாஸ்பேட்டை நாவற்குளத்தில் இந்திய கடலோர காவல் படையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை செயல் அதிகாரி சரத் சவ்கான், டிஜிபி ஷாலினி சிங் மற்றும் கடலோர காவல்படையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த அலுவலகம் மூலம் மரக்காணம் முதல் கோடியக்கரை வரையிலான கடலோர பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.