நாசா விண்வெளி வீராங்கனையும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொண்டதாக தாம் கருதவில்லை என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் விண்கலத்தை போயிங் நிறுவனம் தயாரித்து வருவதாகவும், அந்த விண்கலத்தில் முதன்முறையாக சுனிதா வில்லியம்ஸும், பேரி வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் நிலைமையைக் கையாளுவோம் என்றும் சோமநாத் கூறியுள்ளார்.