சம்பாய் சோரன் பதவி விலகியது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் உட்கட்சி விவகாரம் என ஜார்க்கண்ட் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான பன்னா குப்தா தெரிவித்துள்ளார்.
ஹேமந்த் சோரன் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதியில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சம்பாய் சோரன் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.