தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அம்மாப்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சுமன் என்பவரை போலீசார் கைது செய்தபோது அவர் கீழே விழுந்து காயமடைந்தார். தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி சுமன் அதிகாலை தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில், கைதி விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி தலைமை காவலர் மதுசூதனன், காவலர் கார்த்திகேயன், ஆயுதப்படை காவலர் பிரம்மா ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் உத்தரவிட்டுள்ளார்.